“அம்மா வேண்டாம்”.. கடத்தியவரை பிரிய மனமில்லாமல் கதறி அழுத 1 வயது குழந்தை.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதர் காவல் நிலையத்திற்கு 14 மாதங்களுக்கு முன்னர் குழந்தை காணாமல் போனதாக புகார் ஒன்று வந்துள்ளது. தங்களுடைய 11 மாத பிரித்வி என்ற குழந்தையை காணவில்லை என்று தாய் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை கடத்துபவர்களிடம் விசாரித்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதனால் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு தகவல் தெரிவித்தால் 25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்திருந்தனர்.

பிறகு தனிப்படை போலீசார் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பல இடங்களில் குழந்தையைத் தேடி கடத்திய வரை கண்டுபிடித்தனர். அப்போது கடத்தப்பட்ட அந்த குழந்தை கடத்தியவரிடமிருந்து பிரிய மனம் இல்லாமல் கதறி அழுதது. இருந்தாலும் குற்றவாளி இடமிருந்து குழந்தையை மீட்டு போலீசார் தாயிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். குழந்தையை கடத்திய நபர் அலிகரிலுள்ள ரிசர்வ் போலீஸ் லைனில் ஏட்டாக வேலை செய்து வந்துள்ளார். பிறகு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இவர் குழந்தையை கடத்தி மொபைல் போனை பயன்படுத்தாமல் அடிக்கடி தான் இருக்கும் இடத்தையும் மாற்றி வசித்து வந்துள்ளார். இவர் குறித்து தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அங்கு சென்றபோது குழந்தையுடன் வயல்வெளியில் தப்பியோட முயன்றார். எட்டு கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று தனிப்படை போலீசார் அவரை பிடித்தனர். இதை சுவாரசிய சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

“‘தம்பி… இது பிளாட்பாரம்டா…” வண்டியை வழிமறித்து பாடம் புகட்டிய இளைஞர்கள்… காரில் இருந்து சியர் செய்த நபர்… இணையத்தை அதிர வைக்கும் லேட்டஸ்ட் வைரல் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சாலைப் போக்குவரத் நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பாதசாரிகள் நடக்கும் பிளாட்பாரத்தில் பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு,…

6 minutes ago

“நான் வந்துருவேன் அம்மா…” முழு சம்பளமும் காலி…! பீகார் வாலிபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… விமான பயணத்தின் பின்னணி… சுவாரஸ்ய சம்பவம்…!!

சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…

25 minutes ago

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

34 minutes ago

நம்பர் பிளேட் இல்ல..! “ஆமா.. நான் குடிச்சிருக்கேன்!”… சீருடையில் உளறிய பெண் காவலர்… நடுரோட்டில் மடக்கிய பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…

35 minutes ago

அசுர வேகம்…! உயிர் தப்பிய பைக் ஓட்டுநர்… நடுரோட்டில் புரண்ட கன்டெய்னர்… மரண பயத்தை காட்டிய விபத்து… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…

41 minutes ago