“சூரியனைப் போற்றும் பொங்கல் நன்னாள், திமுகவுக்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும்” என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். தை முதல் நாள் தமிழர் வாழ்வில் மிகவும் சிறப்புமிக்க நாள் எனக் குறிப்பிட்ட அவர், இந்த இனிய திருநாளில் மகிழ்ச்சி பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.
மேலும் தனது வாழ்த்து மடலில், பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதில் மத வேறுபாடுகளோ அல்லது ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வுகளோ கிடையாது எனத் தெரிவித்துள்ளார். சமத்துவ உணர்வுடன் மக்கள் அனைவரும் கொண்டாடும் சிறப்பினை அவர் தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
