#image_title
ஜெயலலிதா தென்னிந்திய சினிமாவில் பிரபலமான புகழ்பெற்ற நடிகையும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவும் பணியாற்றியவர். மைசூர் சமஸ்தானம் மாண்டியாவில் பிறந்தவர் ஜெயலலிதா. இவருக்கு இரண்டு வயதாகும் போது இவரது தந்தை இறந்ததால் அவரது தாயார் கோமளவல்லி தமிழ் சினிமாவில் சந்தியா என்ற பெயரை மாற்றிக்கொண்டு நடித்துக் கொண்டிருந்தார். அதனால் ஜெயலலிதாவுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு பள்ளி படிப்பை முடிக்கும் போதே கிடைத்துவிட்டது.
“வெண்ணிற ஆடை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் ஜெயலலிதா. மொத்தம் 127 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் ஜெயலலிதா. அதில் 28 படங்களில் எம்ஜிஆர் உடன் இணைந்து நடித்து பேரும் புகழும் பெற்றவர் ஜெயலலிதாவும். எம்ஜிஆர் ஜெயலலிதா ஒரு படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்றாலே அந்த படத்திற்கு கூட்டம் அள்ளும் வசூல் சாதனை படைக்கும்.
எம்ஜிஆர் மட்டுமல்லாமல் சிவாஜிகணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவகுமார், ஏவிஎம் ராஜன், என்டி ராமராவ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் ஜெயலலிதா. எம்ஜிஆர் அரசியலுக்கு சென்ற பிறகு ஜெயலலிதா சந்தர்ப்ப சூழ்நிலையால் அவரும் அரசியலுக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எம்ஜிஆரின் அதிமுக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு கட்சியை தூக்கி நடத்தி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக சிறப்பாக ஆட்சி நடத்தியவர். பெண்களுக்காக பல நல்ல நல்லத் திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. மிகவும் திறமையான துணிச்சலான ஒரு பெண்மணி ஆவார். அதற்கு ஒரு சம்பவம் சான்றாக இருக்கிறது.
ஒருமுறை ஜெயலலிதாவை பேட்டி எடுக்க வந்த கல்லூரி மாணவி நீங்கள் மது அருந்துவீர்களா என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு துணிச்சலாக பதில் அளித்த செயலலிதா, மது அருந்துவது என்பது அவ்வளவு கெட்ட பழக்கம் கிடையாது அளவோடு இருந்தால் ஒன்னும் செய்யாது. அது தவிர ஒரு குறிப்பிட்ட குளிர்பானத்தின் பெயரை சொல்லி அதில் ஒரு மாத்திரையை போட்டாலே போதும் கிக் ஏறும் மது அருந்த வேண்டிய அவசியமில்லை. எனக்கு எல்லாமே தெரியும் ஆனால் நான் அதை செய்வதில்லை என்று துணிச்சலாக பதில் அளித்திருக்கிறார் ஜெயலலிதா.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…