திருவனந்தபுரத்தில் திராட்சை மற்றும் பிஸ்கட் சாப்பிட்ட ஒரு வயது குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஷிஜில் – கிருஷ்ணப்பிரியா தம்பதியினரின் ஒரு வயது மகனான இஹான், வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தான். தந்தை ஷிஜில் குழந்தைக்கு திராட்சை மற்றும் பிஸ்கட் கொடுத்ததாகவும், அதனைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே குழந்தையின் வாயில் நுரை தள்ளி மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகப் புகார் எழுந்த நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, குழந்தையின் தந்தை ஷிஜிலுக்கும் தாய் கிருஷ்ணப்பிரியாவுக்கும் இடையே குடும்பப் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், குழந்தையின் மரணத்திற்குப் பின்னால் ஏதேனும் திட்டமிட்ட சதி இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அதன் முடிவுகள் வந்த பிறகே மரணத்திற்கான உண்மைத் தெரிந்து, இந்த மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…