தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மீது திடீரென மோதிய கார்… அடுத்து நடந்த டுவிஸ்ட்… வைரலாகும் வீடியோ…!!

By Soundarya on அக்டோபர் 29, 2025

Spread the love

குஜராத்தின் அகமதாபாத்தில் புதன்கிழமை, அக்டோபர் 29 அன்று, மூன்று வயது சிறுமி மீது கார் மோதிய சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது, மேலும் அந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ ஆன்லைனில் வெளியாகியுள்ளது. ஆனால் சிறுமி அதிசயமாக காயமின்றி தப்பினார்.

சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது  இந்த சம்பவம் நடந்துள்ளது. வீடியோவில், நீல நிற ஸ்விஃப்ட் காரை ஓட்டி வந்த சிறுவன் குடியிருப்புக்குள் நுழைந்ததைக் காணலாம். கார் டிரைவர் சிறுமியை கவனிக்கவில்லை இதனால் கார் அச்சிறுமி மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக, அந்த சிறுமி காரின் அடியில் இருந்து ஊர்ந்து வெளியே வந்தாள். அவளுடைய அலறல் சத்தம் கேட்டதும், அக்கம்பக்கத்தினர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். இதனையடுத்து இதுகுறித்து அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.