ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே சந்தேகத்தின் காரணமாக மனைவியை கணவனே கடப்பாறையால் அடித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்காபுரம் சோலார் செல்ல கிருஷ்ணா நகரைச் சேர்ந்த சேட்டு தனபால் (60) மற்றும் இவரது மனைவி புஷ்பா (58) தம்பதியினர், அப்பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில், குடும்ப உறுப்பினருடன் புஷ்பாவுக்கு தவறான உறவு இருப்பதாகச் சந்தேகித்த சேட்டு தனபால், அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஜூலை 14-ஆம் தேதி நள்ளிரவில் கழிவறைக்குச் சென்று திரும்பிய மனைவியைக் கண்டதும் ஆத்திரமடைந்த அவர், “நீ உயிரோடு இருந்தால் தானே இப்படிச் செய்வாய்” என்று கூறி வீட்டில் இருந்த கடப்பாறையால் புஷ்பாவை கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இரத்த வெள்ளத்தில் கிடந்த புஷ்பாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் தாக்குதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த மொடக்குறிச்சி போலீசார், புஷ்பா உயிரிழந்ததைத் தொடர்ந்து அதனை கொலை வழக்காக மாற்றினர். தலைமறைவாக இருந்த கணவர் சேட்டு தனபாலை உடனடியாகக் கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மறுநாளே, மனைவியின் மீது கள்ளத்தொடர்பு சந்தேகம் கொண்டு அவரைக் கத்தியால் குத்திக்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாகப் பதிவு…
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற 25 வயது இளைஞரை, பெண்களின் உறவினர்கள்…
குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…
பெங்களூரு இந்திரா நகர் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஷூ மற்றும் பேக் பழுதுபார்க்கும் கடையில் 23 வயதான…