சென்னை வியாசர்பாடி பகுதியில் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தன்னுடைய தாத்தா பாட்டியுடன் தங்கி படித்து வந்த சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் காதல் ஏற்பட்டுள்ளது. சிறுமி தன்னை காதலிப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மணிகண்டன் அடிக்கடி அவரை ஏமாற்றி அவரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் தனது தோழிகளுடன் வெளியே செல்வதாக கூறிவிட்டு சிறுமி வீட்டை விட்டு சென்றுள்ளார். பிறகு இரவு 8 மணிக்கு ஆட்டோவில் வந்து இறங்கிய சிறுமி வீட்டுக்கு சென்றதும் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாத்தா பாட்டி அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த மாணவி மது போதையில் இருப்பதால் சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவர்கள் கூறியதால் உடனே அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுமி முழு மது போதையில் மயங்கியதும் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வியாசர்பாடியை சேர்ந்த மாணவியை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய 26 வயதுடைய மணிகண்டன் ஏற்ற தன்னுடைய பிறந்தநாள் என்பதால் சிறுமியை அழைத்துக் கொண்டு அவருடைய வீட்டுக்குச் சென்று மது கொடுத்து சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்து மீறியது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…