தஞ்சாவூர் விளார் சாலை அண்ணாநகரைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் சீனிவாசன் (9), கல்லுக்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும், காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த வினோத் (26) என்பவரின் ஆட்டோவில் 7 மாணவ மாணவிகளுடன் சீனிவாசன் வீட்டுக்குச் சென்றான்.
ஆட்டோ நாஞ்சிக்கோட்டை சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகச் சீனிவாசன் ஆட்டோவிலிருந்து தவறி வெளியே விழுந்தான். தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் கொட்டியதால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் ஏற்கனவே சீனிவாசன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, தஞ்சாவூர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநர் வினோத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பள்ளி மாணவன் ஆட்டோவிலிருந்து விழுந்து இறந்த சம்பவம் தஞ்சாவூர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…