மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்திலிருந்து கல்யாண் நோக்கிச் சென்ற லோக்கல் ரயிலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரயிலில் பயணித்த பெண் நிஹாங் சீக்கியப் பயணியின் தலைப்பாகை மீது ஒரு கழுகு மிகவும் அமைதியாகவும், எந்தவிதப் பயமுமின்றி அமர்ந்திருந்தது. லோக்கல் ரயிலின் நெரிசலிலும், சலசலப்பிலும் அந்தப் பறவை சலனமின்றி அமர்ந்து பயணித்த இந்த அரிய காட்சியைக் கண்டு சக பயணிகள் வியப்படைந்ததுடன், அதைத் தங்கள் மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இக்காட்சியைக் கண்ட இணையவாசிகள் பலர், ரயில் பயணத்தில் இத்தகைய அபூர்வமான காட்சியைப் பார்ப்பது அதிர்ஷ்டம் என்றும், பறவையின் அமைதியைக் கண்டு வியப்படைவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். அதேவேளையில், சில பயனர்கள் லோக்கல் ரயில்களில் இதுபோன்ற பறவைகளைக் கொண்டு செல்ல அனுமதி உள்ளதா என்றும், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில்வேயின் விதிமுறைகள் குறித்துக் கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.
https://www.instagram.com/reel/DcEqKQgNWrj/?utm_source=ig_web_button_share_sheet
சீக்கிய மத பாரம்பரியத்தில் ‘பாஸ்’ எனப்படும் கழுகு அல்லது வல்லூறு, தைரியம், வலிமை, சுதந்திரம் மற்றும் வீரம் ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக பத்தாவது சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய இந்த பறவை, அச்சமற்ற மனப்பான்மையை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இதனால், நிஹாங் பெண் பயணியின் தலைப்பாகை மீது கழுகு அமர்ந்திருந்த காட்சி ஆன்மீக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…