“உல்லாசமாக இருந்துவிட்டு கழற்றிவிட்ட கள்ளக்காதலி”… 40 வயது காதலியை கழுத்தை நெரித்துக் கொன்ற 67 வயது முதியவர்….!

Spread the love

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் 40 வயது பெண் ஒருவரை 67 வயது முதியவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிரேபதாசலகி கிராமத்தைச் சேர்ந்த எமனவ்வா என்ற பெண், தனது கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ஸ்ரீசைலா பட்டீல் என்ற முதியவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில், எமனவ்வா அந்த முதியவருடனான தொடர்பைத் துண்டித்துவிட்டு, 27 வயது இளைஞர் ஒருவருடன் பழகத் தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீசைலா பட்டீல், தனது காதலி வேறொருவருடன் நெருக்கமாக இருப்பதை ஜீரணிக்க முடியாமல் அவருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று ஸ்ரீசைலா பட்டீலின் தோட்டத்து வீட்டிற்கு எமனவ்வா வந்தபோது, மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற முதியவர், எமனவ்வாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் எதுவுமே தெரியாதது போல, அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி ஊர் மக்களிடம் நாடகமாடியுள்ளார். இருப்பினும், போலீசாரின் விசாரணையிலும் பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குற்றத்தை ஒப்புக்கொண்ட முதியவர் ஸ்ரீசைலா பட்டீலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Nanthini

Recent Posts

“புது அம்மா வருவாங்க!”… வயது வித்தியாசத்தால் வெடித்த விபரீதம்?… மகள்களுடன் காவல் நிலையம் சென்ற கணவர்… நள்ளிரவில் நடந்த பயங்கர கொலை…!!

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த 55 வயது ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநர்…

5 minutes ago

ஐயோ… அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு?… பெரிய குளக்கரையில் மயங்கிக் கிடந்த இளம்பெண்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்… புவனகிரியில் பெரும் பரபரப்பு….!

யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள புவனகிரி பெரிய குளத்திற்கு அருகே, இளம்பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில்…

9 minutes ago

மதம் வேறு… மனிதநேயம் ஒன்றுதான்… இறந்த பிறகும் தனியாக விடவில்லை… 85 வயது மூதாட்டிக்கு இறுதி சடங்கு செய்த முஸ்லிம் சகோதரர்கள்…!!

கேரள மாநிலம் வயநாட்டில், மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. 85 வயதான கல்யாணி அம்மா…

13 minutes ago

அச்சோ… கடமைக்கும் பாசத்திற்கும் இடையே தவிக்கும் தந்தை… மகளின் பாசப் போராட்டம்… மனதை உருகவைக்கும் தருணம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

நாடு காக்கும் கடமை ஒருபுறமும், பாசப் பிணைப்பு மறுபுறமும் என ஒரு ராணுவ வீரரின் வாழ்வின் இருவேறு உணர்வுகளைப் பிரதிபலிக்கும்…

15 minutes ago

நீதி கேட்டால் தாக்குதலா?… 13 ஆண்டுகால பகை… வழக்கை வாபஸ் பெற மறுத்த குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரம்… வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், 2013-ம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் பழைய வழக்கை வாபஸ் பெற…

21 minutes ago

திகில் நிமிடங்கள்!… சாலையில் காத்திருந்த எமன்… லாரி மோதி கட்டுப்பாட்டை இழந்த கார்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… பதறவைக்கும் விபத்து…!!

யாதாத்ரி புவனகிரி மாவட்டம் மோட்கூர் மண்டலத்திற்கு உட்பட்ட அனாஜிபுரம் அருகே, டெய்ன்மார் மல்லண்ணாவின் வாகன வரிசை சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத…

25 minutes ago