இது எப்போ..! பிரபல கிரிக்கெட் வீரருடன் திருமணம்..? நடிகை பூஜா ஹெக்டே குறித்து தீயாய் பரவும் தகவல்..!!

By admin on செப்டம்பர் 26, 2023

Spread the love

நடிகை பூஜா ஹெக்டே “மொஹஞ்ஜோதாரோ ” என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர். இந்நிலையில் முகமூடி படத்தின் மூலம் பூஜா ஹெக்டே தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். ஆனால் அந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

   

“ஓக லைலா கோஷம்” என்ற படத்தில் அறிமுகமான பூஜாவுக்கு அடுத்தடுத்த பல தெலுங்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால் பூஜா என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தார். இருப்பினும் டிஜே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த பூஜா பல நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடியாக இணைந்து நடித்தார்.

   

 

தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். அடுத்தடுத்த தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரை பூஜா திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பூஜா அதிகாரப்பூர்வ அறிவிப்போ, விளக்கமோ கொடுக்கவில்லை.

முன்னதாக பூஜா கர்நாடகாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரை காதலிப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில் சல்மான் கானுடன் கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் நடித்த போது அவருடன் டேட்டிங் செய்வதாக வதந்திகள் வந்தது. அதற்கு பூஜா முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.