உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் பல்வேறு தமிழ் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். நடிப்பு மட்டும் இல்லாமல் பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் ஸ்ருதி தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் ஒரு பேட்டியில் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து கூறியுள்ளார். அதாவது ஸ்ருதி மும்பை விமான நிலையத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு மர்ம நபர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அவர் யார் என்று கூட தெரியவில்லை. அந்த நபர் ஸ்ருதிஹாசனுக்கு மிகவும் நெருக்கமாக சென்றுள்ளார்.

இதனால் அசௌகரியமாக உணர்ந்த ஸ்ருதி வேகமாக சென்று காரில் ஏறி உள்ளார். அதுவரை அவரை பின்தொடர்ந்த மர்ம நபர் நீங்கள் யார் என ஸ்ருதிஹாசன் சத்தமாக கேட்டவுடன் அங்கிருந்து நழுவி சென்று விட்டார். சுதந்திரமாக வாழ ஆசைப்படுவதால் இதுவரை பாடிகாடு வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு பாடிகார்ட் வைத்துக் கொள்ள வேண்டுமா என யோசிப்பதாக ஸ்ருதி கூறியுள்ளார்.

