பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தனது குடும்பத்துடன் சென்னை டிடிகே சாலையில் வசித்து வருகிறார். 12-ஆம் வகுப்பு படிக்கும் விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மீரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஒரு வருடமாக மீரா மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் மீரா எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

“Love you all, miss you all… என தொடங்கி 10 வரிகளில் மீரா ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மீரா கடந்த ஞாயிற்றுக்கிழமை சைக்காலஜிஸ்ட்டை தொடர்பு கொண்டு அப்பாயின்மென்ட் வாங்கியுள்ளார்.
இதனையடுத்து அப்பாயின்மென்ட் வாங்கிய பிறகும் மீரா டாக்டரை தொடர்பு கொண்டு அப்பாயின்மென்ட்டை சீக்கிரமாக தர முடியும, உடனே உங்களை பார்க்க வேண்டும் என கேட்டுள்ளார். 12-ஆம் வகுப்பு படித்த மீரா தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு அப்படி என்ன மன அழுத்தத்தில் இருந்தார் என பலரும் வேதனையில் உள்ளனர்.

