நடிகை லட்சுமி மேனன் தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ளார். கேரளாவை பூர்விகமாக கொண்ட லட்சுமிமேனன் விக்ரம் பிரபு உடன் இணைந்து கும்கி, சசிகுமாருடன் சுந்தரபாண்டியன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இதில் சுந்தரபாண்டியன் படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விகடன் விருது லட்சுமிமேனனுக்கு வழங்கப்பட்டது.

இதேபோல சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கும்கி, குட்டி புலி, மஞ்சப்பை, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா உள்ளிட்ட பல்வேறு படங்களில் லட்சுமிமேனன் நடித்துள்ளார். சிறிது காலம் தமிழ் சினிமாவில் லட்சுமிமேனனை பார்க்க முடியவில்லை.

சமீபத்தில் லட்சுமி மேனன் அளித்த பேட்டியில் ஒரு சில நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதாவது பாண்டியநாடு படத்தில் இடம்பெற்ற Fy Fy Fy பாடலில் நடித்த போது 11-ஆம் வகுப்பு தான் படித்ததாக கூறியுள்ளார். சேலையில் தான் பெரிய பெண்ணாக தெரிந்ததாகவும், இப்போது அந்த பாட்டில் நடித்தால் அதைவிட சிறப்பாக இருந்திருக்கும் என கூறியுள்ளார்.

