லியோ ஆடியோ லான்ச்…! வெளியான சூப்பர் அப்டேட்…! எங்கே…? எப்போ தெரியுமா…?

By Begam on புரட்டாதி 18, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர்  நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இத்திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜயுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வருகிறது.

   

இன்னும் சில நாட்களில் லியோ படம் வெளியாக உள்ளது. எனவே தொடர்ந்த லியோ படக் குழு அப்டேடை வெளியிட்டு வருகிறது. கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் விஜய் த்ரிஷா கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

   

 

இந்த நிலையில், ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் அதற்கான பணிகளில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் விஜய் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் தளபதி ரசிகர்கள் தற்பொழுது செம குஷியில் உள்ளனர்.