அடேங்கப்பா., நீலாம்பரிக்கு இவ்ளோ வயசு ஆயிடுச்சா..? நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள்..

By Begam on செப்டம்பர் 18, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அழியாத இடத்தை பிடித்தவர் நடிகர் ரம்யா கிருஷ்ணன்.  சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்த ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.

   

இதைத்தொடர்ந்து அவர் பாகுபலி திரைப்படத்தில்  ராஜமாதா சிவகாமி தேவியாக தோன்றி மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

   

    

 

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறி நடிப்பதில் ரம்யா கிருஷ்ணன் நிகர் வேறு யாரும் இல்லை. இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாது சின்ன திரையில் சீரியல்களிலும், பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.

இதுவரை 260-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் ‘வெள்ளை மனசு’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து அவர் ரஜினி கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ திரைப்படத்திலும் சூப்பர் ஸ்டாருக்கு மனைவியாக நடித்து அசத்தினார்.

தற்பொழுது 53 வயதை எட்டியுள்ள இவரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.