விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்கள் தான் பாலா மற்றும் புகழ். பாலா முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யார்?’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவர் இந்நிகழ்ச்சியில் தனது டைமிங் காமெடி மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இதை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மற்றொரு நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இந்நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் மக்களிடத்தில் வரவேற்பு பெற்றார்.இதை தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கிய அவர் தற்பொழுது இந்த பிரபலத்தின் மூலம் வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். தற்பொழுது பல படங்களிலும் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார்.

விஜய் டிவி பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து புது புது மாடல் கார்களை வாங்கி சமூக வலைதளங்களில் போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர். புகழ், குரேஷி, மணிமேகலை, மைனா நந்தினி, சரத், டிஜே பிளாக், பூவையர் என பலரை இந்த பட்டியலில் சேர்க்கலாம். ஆனால் சமீபத்தில் பாலா தனது பிறந்தநாளுக்கு ஒரு முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்பொழுது மீண்டும் ஒரு ஆம்புலன்ஸ் வாங்கியுள்ளார் பாலா. அதுவும் அதிலேயே ஐசியு வசதி கொண்ட ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி ஈரோடு அருகே உள்ள மலை வாழ் மக்களுக்கு கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ‘தான் இதற்காக யாரிடமிருந்தும் பணம் வாங்கவில்லை. என்னுடைய சொந்த பணத்தை போட்டு வாங்கி கொடுத்துள்ளேன்’ என்று கூறியிருந்தார்.

சமீபத்தில் கூட தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்தார். மேலும் இவர் தற்பொழுது தாமரைக்கரை மலை கிராமத்தை சேர்ந்த 125 விவசாயிகளுக்கு மண்வெட்டி, கடப்பாறை மற்றும் இரும்பு கூடை போன்ற வேளாண் உபகரணங்களையும் பாலா வாங்கி கொடுத்துள்ளார். தற்போது இவரின் செயலை பாராட்டி பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
