சிறுத்தை சிவா இயக்கும் கங்குவார் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்த வருகிறார். அந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்தது. இந்நிலையில் நடிகர் சூர்யா சுதா கங்கரா இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனமே அந்த படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில் துல்கர் சல்மான், நஸ்ரியா ஆகியோர் இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்நிலையில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பட குழுவினர் நடிகர் மாதவனை அணுகி உள்ளனர். ஆனால் இதுவரை மாதவன் எந்த பதிலும் கூறவில்லை. ஏற்கனவே நடிகர் மாதவனும் சூர்யாவும் இணைந்து ஆயுத எழுத்து, ராக்கெட்ரி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் சூர்யா அளித்த பேட்டியில், மும்பையில் செட்டில் ஆன பிறகு நடிகர் மாதவன் தான் சூர்யாவுக்கு டென்னிஸ் கற்றுக் கொடுத்துள்ளார். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வருகின்றனர். அதற்காகவாவது மாதவன் ஒப்புக் கொள்வார் எனக் கூறப்படுகிறது. முக்கியமாக நடிகர் மாதவன் இறுதி சுற்று என்ற வெற்றி படத்தில் நடித்தார். அந்த படத்தை இயக்கியது சுதா கொங்கரா.

எனவே அந்த பழக்கத்திற்காவது மாதவன் சூர்யா நடிக்கும் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக் கொள்வார் என கூறப்படுகிறது. ஆனால் மாதவன் இயக்கிய ராக்கெட்ரி படத்திற்கு பல்வேறு தேசிய விருதுகள் கிடைத்தது. அது மட்டுமில்லாமல் ஒன்றிய அரசு மாதவனுக்கு தற்போது முக்கியமான பதவியை கொடுத்துள்ளது. அதனால் தான் எப்படி இந்த சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பது என மாதவன் தயக்கம் காட்டுகிறாரோ என திரை வட்டாரங்கள் பேசி வருகிறது.

