இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தோடு உருவான படம் மார்க் ஆண்டனி. இந்த திரைப்படத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே சூர்யா, அபிநயா, ரித்து வர்மா, சுனில் உள்பட பலர் நடித்துள்ளனர். நேற்று இந்த படம் திரையரங்குகளில் வெளியானது.

மார்க் ஆண்டனி படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் தட்டி தூக்கி உள்ளது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் கன்னடம் ஆகிய மக்களிடையேயும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா ஆகிய இருவரும் மூன்று விதமான காலகட்டங்களில் வருவார்கள் என கூறப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக மிரட்டிய எஸ்.ஜே சூர்யா மூன்று கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம் வசூல் ரீதியாக சாதனை படைத்ததால் பட குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

