தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளனர். அதன் அடிப்படையில் நடிகர்கள் சிம்பு, விஷால், தனுஷ், அதர்வா ஆகியோர் மீது தயாரிப்பாளர்கள் அடுக்கடுக்காக புகார்கள் வைத்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித பதிலும் அளிக்காததால் நடிகர்கள் விஷால், சிம்பு, தனுஷ், அதர்வா ஆகியோருக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் சிம்பு மீது ஏற்கனவே தயாரிப்பாளர் மைக்கேல் ராஜன் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து முடிந்தது. ஆனாலும் இவருக்கு இடையே உள்ள பிரச்சனை அப்படியே இருந்தது. நடிகர் விஷாலை பொருத்தவரை ஏற்கனவே அவர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும்போது சங்க பணத்தை முறையாக கையாளவில்லை என்ற புகார் எழுந்தது. இதனையடுத்து நடிகர் தனுஷை பொறுத்தவரை முரளி தயாரிப்பில் உருவாகும் படத்தின் 80% படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொண்டார். அதன் பிறகு 20 % படப்பிடிப்புக்கு தனுஷ் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்த அதர்வாவுக்கு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க அவர்கள் சரியாக வராததால் ரெட் கார்டு கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தற்போது இரண்டாக பிரிந்துள்ளது. ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நடிகர்கள் பழைய தமிழ் தயாரிப்பாளர் சங்கத்திற்கு செல்லாமல் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்று பிரச்சனைக்கு தீர்வு காண்கின்றனர். இதனாலேயே இவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
