கொல மாஸ்… லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்… ‘தலைவர் 171’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு….

By Begam on செப்டம்பர் 11, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் செய்யாத மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது. ஒரே வாரத்தில் உலக அளவில் 375.40 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

   

தமிழ் சினிமாவில் ஒரே வாரத்தில் எந்த அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வசூல் செய்ததில்லை தலைவரின் ‘ஜெயிலர்’ திரைப்படம், வெளியாகி வசூல் 600 கோடியை கடந்து விட்டதாக கூறப்படுகிறது.  இதைத்தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பல்வேறு முறையில் கொண்டாடி வருகிறது.

   

 

தற்பொழுது மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தலைவர் 171 திரைப்படத்தையும் தயாரிக்க உள்ளது. ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்புகளில் ஒன்று தான் தலைவர்171. இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த், தற்போதைய இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் தலைவர்171 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது.

அண்ணாத்த மற்றும் ஜெயிலர் படங்களைத் தொடர்ந்து வரிசையாக மூன்றாவது முறை தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைகிறது சன் பிக்சர்ஸ். ராக்ஸ்டார் அனிருத் இசை அமைக்கும் இப்படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதோ அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…