சின்னத்திரை சீரியல்களில் நடித்த நடிகை பௌஸி டாடா படத்தில் நடித்து பிரபலமானார். சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பௌசி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சின்னத்திரை வெள்ளித்திரை என எங்கு சென்றாலும் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள். ஒரு சிலர் திறமைகளை மதித்து வாய்ப்பு கொடுப்பதில்லை.

அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் என கூறுகிறார்கள். அட்ஜஸ்ட்மென்ட் பேஃக்டர் சினிமாவில் மட்டுமில்லாமல் எல்லா துறைகளிலும் இருக்கிறது. ஊடகங்கள் நேராக இதைப் பற்றி பெண்களிடம் கேட்கிறார்கள். என்னையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி அழைத்து வந்தது. நான் அதையெல்லாம் தாண்டி வந்து விட்டேன்.

அட்ஜஸ்ட்மென்ட் கேட்பவர்கள் தாழ்ந்தவர்கள். அவர்களை நாம் கண்டு கொள்ளக்கூடாது என கூறினார். இதனை அடுத்து குடிப்பழக்கம் இருக்கிறதா என கேட்ட கேள்விக்கு ஆம் இருக்கிறது. கல்லூரி நாட்களில் குடித்தேன். ஆனால் தற்போது குளிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன். என் உடல் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரச்சனை வந்ததால் தற்போது குடிப்பதில்லை எனக் கூறினார்.

