‘இவர் தான் யா மனுஷன்’… காசோலை கொடுத்து பல குடும்பத்துக்கு பண உதவி செய்த நடிகர்  லாரன்ஸ்… வைரலாகும் வீடியோ…

By Begam on புரட்டாதி 3, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் சந்திரமுகி 2 படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்து இருக்கிறார். பி.வாசு இயக்கி இருக்கும் இந்தத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது.

   

இந்தத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனிடையே  சினிமாவில் பிஸியாக இருக்கும் ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஏகப்பட்ட நல உதவிகளை செய்து வருகிறார். அவர்களை பாதுகாத்து வளர்ப்பது, படிக்க வைப்பது போன்ற சேவைகளை லாரன்ஸ் அறக்கட்டளை மூலமாக செய்து வருகிறார்.

   

 

இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு கல்வி மற்றும் மருத்துவமனை செலவுகள் உள்ளிட்ட பல நல உதவி திட்டங்களை செய்து வருகிறார். கடந்த ஆண்டு “மக்களுக்கு சேவை செய்யும் முழு பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். இதனால் இனி என் அறக்கட்டளைக்கு யாரும் உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம்” என சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தற்பொழுது இவர் வறுமை மற்றும் ஏழ்மையில் தவிக்கும் 6 குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பண உதவி செய்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘இவர் தான் யா மனுஷன்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by ChennaiTimesTOI (@chennaitimestoi)