Connect with us

CINEMA

ப்பா.. என்ன அழகு!… நடிகை இனியாவுக்கு இவ்ளோ அழகான தங்கையா?…  அம்மா, அப்பா, தங்கை என பலரும் பார்த்திடாத குடும்ப புகைப்படம்…

நடிகை இனியா, கேரள வரவான இவர் தனது சிறு வயதிலேயே மலையாள தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நடித்து புகழ் பெற்றவர். 2005 ஆம் ஆண்டில் மலையாள சினிமாவில் அறிமுகமாகிய இவரை, இயக்குனர் மிஷ்கின் தனது ‘யுத்தம் செய்’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுகபடுத்தினார்.

   

தொடர்ந்து ‘வாகை சூடவா’ திரைபடத்தில் ஹீரோயின் வாய்ப்பை பெற்று நடிப்பில் திறமையை நிரூபித்தார். இனியா தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் ஒரு பெரிய வெற்றி கிடைக்காமல் தவித்து வந்தார். இருப்பினம் இவரது ஹோம்லி கிளாமர் அழகிற்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. பட வாய்ப்புகள் குறைந்தாலும் நடிகை இனியா தொடர்ந்து விளம்பர உலகில் பிஸி நடிகையாக உள்ளார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை இனியா. இவர் தற்பொழுது தனது  சகோதரி மற்றும் பெற்றோருடன் ஓணம் கொண்டாடிய அழகிய புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘ நடிகை இனியாவுக்கு இவ்ளோ அழகான தங்கையா? என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

Continue Reading

More in CINEMA

To Top