Connect with us

CINEMA

இந்த புகைப்படத்தில் கியூட்டாக இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?… ரசிகர்களை கவர்ந்த நடிகை யாருன்னு நீங்களே பாருங்க…

சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் தெரியுமா என்று கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் பிரபல நடிகை சம்யுக்தா மேனனின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

   

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பவர் தான் நடிகை சம்யுக்தா. மலையாளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பாப்கார் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் கலரில் மற்றும் ஜூலை காற்றில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். ஆனால் இவருக்கு அந்த திரைப்படங்கள் எதுவும் கை கொடுக்காததால் மீண்டும் மலையாள திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்தார்.

இதனிடையே சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். இதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சம்யுக்தாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்பொழுது இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top