பிக் பாஸ் குட்டி திரிஷா ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் புகைப்படங்கள்..

By Begam on ஆவணி 28, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவில் ஒன்று பிக் பாஸ். ஐந்து சீசன்களின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் ஆறாவது சீசனும் ஒளிபரப்பாகி நிறைவடைந்தது. இடையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி வந்தது. சிம்புவை அந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்தார்.கடந்த சில நாட்களாக பிக்பாஸ் 7வது சீசன் குறித்த புரொமோக்கள் வெளியாகி வருகின்றன, இந்த முறை ஒரு வீடு இல்லையாம், இரண்டு வீடு உள்ளதாம்.

   

அந்த புதிய புரொமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. பிக் பாஸ் சீசன் 6ல் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் ஒருவர் தான் இலங்கையைச் சேர்ந்த ஜனனி. ஒவ்வொரு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு இலங்கை போட்டியாளர் கலந்து கொள்வது வழக்கமாகிவிட்டது.அதைப்போல முந்தைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.

   

 

இவரைத் தொடர்ந்து இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜனனி கலந்து கொண்டார்.  பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய லாஸ்லியாவிற்கு  அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் குவிய தொடங்கியது. தற்பொழுது இவரை பின்தொடர்ந்து வந்த ஜனனியும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளார். இவருக்கும் தற்பொழுது பட வாய்ப்புகள் குவிந்து  கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் மிகவும் பொறுமையாக இவர் கதைகளை தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறாராம். இப்போது விஜய்யின் லியோ படத்தில் நடித்துள்ளார் என்கின்றனர். ஆனால் இதுவரை படத்தில் இருந்து ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை. சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் பிக்பாஸ் புகழ் ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.