Connect with us

CINEMA

பிளாக் பஸ்டர் ‘ஜெயிலர்’ வெற்றியை சிம்பிளாக படக்குழுவினருடன் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்… வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, மிர்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் செய்யாத மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது.

   

ஒரே வாரத்தில் உலக அளவில் 375.40 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் ஒரே வாரத்தில் எந்த அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வசூல் செய்ததில்லை தலைவரின் ‘ஜெயிலர்’ திரைப்படம், வெளியாகி 2 வாரங்களை கடந்த நிலையில், சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக ஜெயிலர் திரைப்படம் 523 கோடியை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

ஜெயிலர் பட ரிலீஸின் போது இமயமலை சென்றிருந்த சூப்பர் ஸ்டார் தற்பொழுது சென்னை திரும்பியுள்ளார். இவர் தற்பொழுது பிளாக் பாஸ்டர் ஜெயிலர் வெற்றியை சிம்பிளாக படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top