தமிழ் சினிமாவின் பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன். இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தற்போது பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்வது வழக்கம். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 மில்லியனுக்கும் மேலான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

இதனிடையே பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து வருகின்றார். இந்நிலையில் மாளவிகா மோகனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நான் திரைத்துறையில் நுழைந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் மட்டுமே நடிப்பேன்.

500 கோடி ரூபாய் வசூலிக்கும் பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றால் அந்த திரைப்படத்தில் நான் நடிக்க போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். எனவே இனி படங்களை தேர்வு செய்து தான் நடிக்க போகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
