பிறந்தநாள் அதுவுமா இப்படி நடக்கணுமா?… உயிரிழந்த நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர்கள்… இதுதான் காரணமா?…

By Begam on ஆடி 23, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்பொழுது இவர் தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சூரரைப்போற்று, ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலையும் வாரி குவித்தது.

   

சமீபத்தில் சூரரைப்போற்று திரைப்படம் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்ததும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் புராணக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார் .

   

 

கங்குவா படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் சூர்யா தனது உடல் எடையை பல மடங்கு கூட்டிய புகைப்படங்களும் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது. நடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் அவர்களுக்கு தற்பொழுது இரண்டு பிள்ளைகள் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் நடிகர் சூர்யா தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.அவரது பிறந்த நாளை ரசிகர்கள் பலரும் பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஆந்திராவில் பல்நாடு மாவட்டத்தில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை ஒட்டி கட்டவுட் வைத்த பொழுது மின் கம்பி மோதி  கட்டவுட்டில் மின்சாரம் பாய்ந்ததில் வெங்கடேசன், சாய் என்ற நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் இருவர் உயிரிழந்தனர். தற்போது இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.