காவாலா பாட்டுக்கு வேற லெவலில் ஆட்டம் போட்டு.. தமன்னாவை தூக்கி சாப்பிட்ட பிக்பாஸ் ஜனனி… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

By Nanthini on ஆடி 23, 2023

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் இலங்கை பெண்ணான ஜனனி. ஆரம்பத்தில் இவரின் நடவடிக்கைகள் ரசிகர்களை கவரும் விதமாக இருந்தாலும் ஏராளமானோர் ஜனனியை ஆதரித்தனர். தன்னுடைய எதார்த்தமான சிரிப்பாலும் குழந்தைத்தனமான செயல்பாடுகளாலும் பல ரசிகர்களுக்கு விருப்பமான ஒருவராக மாறினார்.

   

இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இந்தியாவில் வசித்து வரும் இவர் தொடர்ந்து தனது க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

   

 

இந்நிலையில் தற்போது விளம்பரங்கள், திரைப்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்கள் என பிசியாக இருந்து வருகின்றார். தற்போது ஜனனி ஜெய்லர் திரைப்படத்தில் சமீபத்தில் வெளியான காவாலா பாடலுக்கு கிளாமர் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தமன்னாவை தூக்கி சாப்பிட்ட ஜனனி என்று கூறி வீடியோவை வளராக்கி வருகிறார்கள்.