‘என்ன போஸ் எல்லாம் ஒரு வித்தியாசமா இருக்கு’… தனது மனைவியுடன் இணைந்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் கெளதம் கார்த்திக்…

By Begam on ஆடி 14, 2023

Spread the love

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘கடல்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். இவர் நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகன் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்திருந்தாலும் தன்னுடைய திறமையை கொண்டு தன்னை நிரூபிக்க போராடி வருகிறார்.

   

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இவர் நடிப்பில் வெளியான வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து தற்பொழுது கௌதம் கார்த்திக் சிப்பாய், யுத்த சத்தம், செல்லப்பிள்ளை, பத்து தல போன்ற பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

   

 

இந்நிலையில் ‘தேவராட்டம்’ திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மஞ்சிமா மோகன் கௌதம் கார்த்திக் காதலித்து வந்தார். இதனை அதிகாரபூர்வமாக இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தனர். இதைதொடர்ந்து நடிகர் கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனை நவம்பர் 28 ல் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது  திருமண புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது. இவர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு இனிமையான தருணங்களையும் இணையத்தில் புகைப்படங்களாக பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகை மஞ்சிமா உடல் எடையை குறைத்த ஸ்லிம் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்திருந்தார்.

அந்தவகையில் தற்பொழுது நடிகர் கெளதம் கார்த்திக் தனது மனைவி மஞ்சிமா உடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘என்ன போஸ் எல்லாம் ஒரு வித்தியாசமா இருக்கு’என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்….