விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை காண குடும்பத்துடன் சென்ற காஜல் அகர்வால்… வெளியான புகைப்படங்கள்..!!

By Nanthini on ஆடி 13, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யாவுடன் பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார்.

   

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சினிமாவில் பிசியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

   

 

அதன் பிறகு மற்ற நடிகைகளை போலவே திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து திடீரென விலகினார் காஜல் அகர்வால்.

இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில்  இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் காஜல் அகர்வால் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஸ்வியாடெக் உலக மகளிர் டென்னிஸ் போட்டியை நேரில் காண தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.

அப்போது அவரின் தங்கையும் உடன் இருந்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.