Connect with us

CINEMA

விவாகரத்து பெற்று கணவரை பிரிந்து தனியாக வாழும் நடிகை சீதாவின் மகளா இது?… ஹீரோயின் போல இருக்காங்களே…

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் ஆண் பாவம், குரு சிஷ்யன், ராஜா நடை என பல படங்களில் நடித்து மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

இதை தொடர்ந்து அவர் நடிகர் பார்த்திபனுடன் இணைந்து பாரதி கண்ணம்மா, வருவாய் என, புதிய பாதை போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்தார். இதன் பிறகு நடிகர் பார்த்திபனுக்கும் சீதாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அத்துடன் ஆண் குழந்தை ஒன்றையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

11 வருடம் இணைந்து வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 2001ல் விவாகரத்து பெற்றனர். இதை தொடர்ந்து நடிகை சீதா தனது 43 வது வயதில் டிவி நடிகர் சதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவரையும் சில மாதங்களிலேயே விவாகரத்து செய்து விட்டார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்க கூடியவர் நடிகை சீதா . இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். இவர் இயற்கையாக மாடி தோட்டம் அமைத்து விவசாயமும் செய்து வருகிறார். தற்பொழுது நடிகை சீதா தனது மகளுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்…

Continue Reading

More in CINEMA

To Top