‘ரோஜா’ சீரியல் நடிகை ஷாமிலி சுகுமாரின் அழகிய குடும்பப் புகைப்படங்கள்…

By Samrin on ஆடி 9, 2023

Spread the love

இன்றைய காலத்தில் சினிமாவில் நடிக்கும் நடிகர் மற்றும்  நடிகைகள்  போலவே சீரியலில் நடிகை மற்றும் நடிகர்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த  வரவேற்பு உள்ளது. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் டிவியின் மூலம் ரசிகர்களை சந்திக்கும்பிரபலங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இன்னுமே அதிகம்  ஆகி கொண்டே வருகிறது.

   

குறிப்பாக சீரியலில் நடிக்கும் வில்லி, வில்லன்களை நிஜ வில்லனாக பார்க்கும் வழக்கமும் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியிருக்கிறது.  சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்ன  மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

   

 

அந்த வகையில் சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல் ‘ரோஜா’ இந்த சீரியலை இயக்குனர் வா. சதாசிவம் அவர்கள் இயக்கியுள்ளார்.  இந்த சீரியலில் பிரியங்கா நல்கார்,  சிப்பு சூரியன், ஷாமிலி சுகுமார், வடிவுக்கரசி, லதா,  சிவா, வெங்கட் ரங்கநாதன் போன்ற பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.

இந்த சீரியலில் பிரியா  என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ஷாமிலி சுகுமார். இவர் தந்தை சுகுமார். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பை முடித்தார்.

நடிகை ஷாமிலிக்கு, காமெடி, டான்ஸிங், சிங்கிங் என பிடித்தவைகள் ஏராளம் இவர் முதலில்  சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று ‘தென்றல்’. இந்த சீரியலில்  வில்லியாக நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார் .

இதை தொடர்ந்து நடிகை ஷாமிலி  சன் டிவியில் ஒளிபரப்பான பைரவி,வாணி ராணி,பிரியமானவன்,வள்ளி உள்ளிட்ட பல வெற்றி தொடர்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார் ஷாமிலி.

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார் ஷாமிலி. இவர் சின்னத்திரை சீரியல்  மட்டும்மல்லாமல்   வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார்.

நடிகை ஷாமிலி  ஜிவி பிரகாஷ்மற்றும்   ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான ‘பென்சில்’. திரைப்படத்தில் நடித்தார். நடிகை ஷாமிலி ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இவர்கள் சமீபத்தில் ‘ சூப்பர் ஜோடி சூப்பர்’ என்ற நிகழ்ச்சிகள் பங்கு  பெற்று ரன்னராக வெற்றி பெற்றனர். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவர்களின் குடும்ப புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.