11 வருடங்களுக்கு பிறகு அப்பாவான நடிகர் ராம்சரண்…  ”தேவதை பிறந்து விட்டாள்”… மகிழ்ச்சியில் சிரஞ்சீவி குடும்பம்…

By Begam on ஆனி 20, 2023

Spread the love

‘சிறுத்தை’ எனும் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் ராம்சரண்.. இவர் நடிப்பில் வெளியான ‘மகதீரா’ திரைப்படம் இவரை பிரபலமாக்கியது. இப்படத்தின் மூலம் நடிகர் ராம்சரண் பாண் இந்திய நடிகராக மாறிவிட்டார். இவர் நடிகர் சிரஞ்சீவி மகனும் ஆவார். தொடர்ந்து டோலிவுட்டில் தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

   

அப்பாவை போலவே நட்சத்திர நடிகராக இளம் வட்டாரத்தை வளைத்துவிட்டார் என்று கூறலாம். நடிகர் ராம்சரண் இறுதியாக ராஜமௌலி இயக்கத்தில் RRR படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்ததோடு இரண்டு ஆஸ்கார் விருதையும் தட்டி தூக்கியது.

   

 

இதனை தொடர்ந்து ராமச்சந்திரன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  நடிகர் ராம்சரண் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே உபாசனா காமினேனி என்பவரை காதலித்து 2012 இல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு திருமணமாகி தற்பொழுது 11 ஆண்டுகள் ஆன நிலையில் சமீபத்தில் உபாசனா காமினேனி கர்ப்பமாக இருந்த நற்செய்தியை நடிகரும் ராம்சரணின் தந்தையுமான சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ரசிகர்களை மகிழ்வித்தார். இதைத்தொடர்ந்து தற்பொழுது நடிகர் ராம்சரனின் மனைவி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனால் சிரஞ்சீவி குடும்பமே சந்தோஷத்தில் மூழ்கியுள்ளது.