விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. இவர் 2018ல் சிவாஜி தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிவாஜி தேவ், சுஜாவரணி தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

திருமணத்திற்குப் பிறகு ஏராளமான பெண் தொழில் முனைவோர்களை உத்தியோகத்துடன் ஊக்கப்படுத்தி உருவாக்கியவர் நடிகை சுஜா. இவர் சுசிஷ் ஃபன் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் சிறிய இடைவெளிக்கு பிறகு த்ருஷ்யம் 2 படத்தில் நடித்து அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளார் நடிகை சுஜா.

இதன் மூலம் மீண்டும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அழுத்தமான வேடங்களில் நடிக்க தயாராகியுள்ளார். தற்பொழுது வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார் நடிகை சுஜா வருணி. சமீபத்தில் நடைபெற்று முடிந்த பி பி ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சுஜா. இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘தான் பெரியம்மா ஆகி இருப்பதாகவும், தனது தங்கைக்கு குழந்தை பிறந்திருப்பதாகவும்’ மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் .இதோ அவரின் வைரல் பதிவு…
View this post on Instagram
