‘என்னுடைய மகிழ்ச்சி உன்னுடைய அரவணைப்பில்’… தனது மனைவி தன்னை கட்டி பிடிக்கும் ரீல்ஸை பகிர்ந்த கலக்கப்போவது யாரு TSK… வைரல் வீடியோ…

By Begam on வைகாசி 18, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘கலக்கப்போவது யாரு’. இந்தநிகழ்ச்சிக்கு இன்றுவரை ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளது என்றே கூறலாம். காமெடிக்கு பிரபலமான இந்நிகழ்ச்சியின் மூலம் மிகப்  பிரபலமானவர் TSK. அதாவது டிஎஸ்கே என்கிற திருச்சி சரவண குமார்.

   

இவர் தற்பொழுது சின்ன திரையில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். நடிகர் டிஎஸ்கேவும் அசாரும் இணைந்து செய்யும் நகைச்சுவையை காணவே தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் சின்னத்திரையில்  மட்டுமின்றி வெள்ளிதிரையிலும் தற்பொழுது ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார்.

   

 

கலக்கப்போவது யாரு சீசன் 8 டைட்டிலை வென்றுள்ள இவர் தற்பொழுது ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு வருகின்றார். இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி தன்னை கட்டி பிடிக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த பதிவில் அவர் ‘உனது அரவணைப்பிலே எனது மகிழ்ச்சி இருக்கிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.  இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Tsk (@tsk_actor)