திடீரென மரணம் அடைந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…

By Begam on வைகாசி 15, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று ‘பாரதி கண்ணம்மா’. இந்த சீரியல் ஆரம்பித்த நாட்களில் மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் ஓடிக்கொண்டிருந்தது. இந்த சீரியலில் அருண் மற்றும் ரோஷினி ஹீரோ ஹீரோயினாக நடித்து அசத்தி இருந்தனர்.

   

இதனைதொடர்ந்து 1000ன் எபிசோடுகளை கடந்த இந்த சீரியல் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது இதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹீரோவாக சிப்பு சூரியனும், ஹீரோயினாக வினுஷாவும் நடித்து வருகின்றனர்.

   

 

பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் பாகத்தில் கண்ணம்மாவின் பாட்டியாக வில்லியாக நடித்தவர் பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி. இவரின் நடிப்பு இந்த சீரியலில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இவர் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்கலில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா என பல ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது 70 வயதை எட்டியுள்ள இவர் இன்று அதிகாலை தூக்கத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தற்போது  திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.