’80S’ களில் முன்னணி நடிகை ராதாவின் பலரும் பார்த்திடாத புகைப்படங்கள் இதோ…

By Samrin on சித்திரை 27, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் 80ஸ் களில் முன்னணி நடிகையாக  வலம் வந்தவர் நடிகை ராதா. இவர் 1966 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி பிறந்தார் .

   

இவர் திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.தந்தை கருணாகரன் நாயர் தாய் சரசம்மா. இவருக்கு ,

   

 

அம்பிகா மற்றும் மல்லிகா என இரண்டு சகோதரிகளும் அர்ஜுன் மற்றும் சுரேஷ் நாயர் என்ற இரண்டு சகோதரர்களும் உள்ளனர்.

1981 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் மூலம்  கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து தூங்காதே தம்பி தூங்காதே, ஒரு கைதியின் டைரி, ஜப்பானில் கல்யாணராமன் ,காதல் பரிசு போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.

இவர் முதல் மரியாதை படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது பெற்றார்.இந்த திரைப்படமானது,

1985 இல் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா என்ற பிரிவில் வெளியிடப்பட்டது.

இவர் சிவாஜி கணேசன், சிவக்குமார் ,ரஜினிகாந்த், கமலஹாசன், கே.பாக்யராஜ், விஜயகாந்த், சத்யராஜ்,

மோகன்,பிரபு ,கார்த்திக், டி ராஜேந்தர் ,அர்ஜுன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் .

இவர் கலைமாமணி விருது ,எக்ஸ்பிரஸ் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று  ‘ஜோடி நம்பர் சீசன் 6’.

இந்த நிகழ்ச்சியிலிருந்து ‘ஜோடி நம்பர் சீசன்9’ வரை நடுவராக பணியாற்றினார்.இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 8 நடுவராகவும் பணியாற்றினார்.

நடிகை  ராதா ஹோட்டல் அதிபரான ராஜசேகரன் என்பவரை 1991 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு விக்னேஷ் என்ற மகனும் ,கார்த்திகா மற்றும் துளசி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

இவரின் இரண்டு மகள்களும் இருவரும் தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளனர். நடிகை ராதாவின்  பலரும் பார்த்திடாத புகைப்படமானது இணையத்தில்வெளியாகி வைரலாகி வருகிறது.