ஏ எல் விஜய் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘தெய்வத்திருமகள்’ இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார் பேபி சாரா.

இப்படத்தின் மூலமாக மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.சிறந்த குழந்தை நட்சத்திர விருதை பெற்றார்.

இவர் தந்தை ராஜ் அர்ஜுன் ஒரு இந்தி திரைப்பட நடிகர்,இவரின் தாயார் சான்யா ஒரு நடன ஆசிரியர்.

நடிகை சாரா 2011 ஆம் ஆண்டு இந்தி திரைப்படமான ‘404 ‘என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து ஹிந்தி குறும்படங்களிலும் நடித்து புகழ்பெற்றார் . நடிகை சாரா மிகப் பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார்.

இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவான ‘சைவம்’படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இவர் தமிழில் சித்திரையில் நிலாச்சோறு ,விழித்திரு ,பூவரசன் பீப்பி ,சில்லு கருப்பட்டி, பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ், ஹிந்தி ,தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துள்ளார்.

இவர் ஐஸ்வர்யாராயின் இளம் பருவ கதாபாத்திரத்தில் பேபி சாரா நடித்துள்ளார்.இவர் இப்படத்தில் பிளாஸ்பேக் காட்சியில் வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர்.

இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
