‘பாக்கியலட்சுமி’ சீரியலில்… தலையில் துண்டை போட்டு பயத்தில் உட்கார்ந்திருக்கும் கோபி… வைரலாகும் புகைப்படம்… நீங்களே பாருங்க…

By Begam on மாசி 22, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியல் தற்போது பரபரப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இந்த சீரியல் தற்போது விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

   

சமீபத்தில் இந்த சீரியலில் அமிர்தா மற்றும் எழில் திருமணத்தை மொத்த குடும்பத்தையும் எதிர்த்து பாக்யா நல்லபடியாக நடத்தி முடித்தார். இதைத் தொடர்ந்து கோபியிடம் 20 லட்சம் தருவதாக சவாலும் விட்டுள்ளார்.

   

 

கோபியிடம் பணத்தை கொடுப்பதற்காக இரவு பகல் பார்க்காமல் கேட்டரிங் வேலை  செய்து வருகிறார் பாக்யா. தற்போது இந்த சீரியலில் இனியாவின் காதல் கதை ஒரு பக்கமும் பாக்கியாவின் பிசினஸ் மறுபக்கம் என பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

இந்த சீரியலின் முக்கியமான கதாபாத்திரம் கோபி. தனது நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார். தற்பொழுது அவரது தலையில் துண்டை போட்டு பயந்து உட்கார்ந்து இருப்பது போல ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் என்னாச்சு உங்களுக்கு கோபி?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் இனி என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.