விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘ராஜா ராணி’. இந்த சீரியலில் முதல் பாகத்தில் ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஹீரோ ஹீரோயின்களாக நடித்து அசத்தி இருந்தனர். இந்த சீரியல் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து ‘ராஜா ராணி 2’ சீரியல் எடுக்கப்பட்டது.

இந்த சீரியலில் மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் எப்படி தன்னுடைய பிரச்சினைகளை தகர்த்து ஐபிஎஸ் அதிகாரியாக தனது இலட்சியத்தை அடைய போராடுகிறார் என்பதை சீரியலின் இயக்குனர் அழகாக எடுத்துரைத்துள்ளார்.

மேலும் இந்த சீரியலை விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலை இயக்கி வரும் பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார். தற்பொழுது இந்த சீரியல் முதலில் கதாபாத்திரத்தில் சந்தியா கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்துக் கொண்டு வந்தார்.

இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது கர்ப்பமானதால் சீரியலை விட்டு உடனடியாக விலகினார். இவரை தொடர்ந்து சந்தியா கதாபாத்திரத்தில் ரியா விஸ்வநாதன் களமிறங்கினார்.

ஆரம்பத்தில் இவர் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்படவில்லை. ஆனால் தற்பொழுது இவர் தனது நடிப்பு திறமையால் வெகுவாக ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் திடீரென இவர் ராஜா ராணி 2 சீரியல் விட்டு விலகி விட்டதாக கூறப்பட்டது.

தற்பொழுது அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ ராஜா ராணி 2 சீரியல் விட்டு தான் விலகி விட்டதாகவும், இனி சந்தியா கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகை நடிக்க இருப்பதாகவும்’ வீடியோ வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

ஆனால் இவர் என்ன காரணத்திற்காக இந்த சீரியலை விட்டு விலகினார் என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை. தற்பொழுது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘என்ன பிரச்சனை? எதனால் இந்த சீரியல் விட்டு விலகுகினீர்கள்?’ என்று அவரிடம் கமெண்ட்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதோ அவரின் வைரல் வீடியோ…
View this post on Instagram
