Connect with us

VIDEOS

அந்த மனசு இருக்கே அது தான் சார் கடவுள்….. பலூன் விற்ற பையனுக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் உணவு…..

பலூன் விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் அந்த பக்கம் வந்த பெண் ஒருவர் அவரை அழைத்துச் சென்று பெரிய ஹோட்டலில் உணவு வாங்கிக் கொடுத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

இணையத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாக இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களில் சில வீடியோக்கள் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்.

அதாவது பலருக்கும் உதவி செய்யும் வீடியோக்கள் நம் மனதை கவரும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் பெரிய ஹோட்டலின் வெளியில் நின்று பலூன் விற்றுக் கொண்டிருக்கிறான் அந்த சிறுவன். அவனைப் பார்த்த ஒரு பெண் வருகிறாயா நான் உனக்கு இந்த ஹோட்டலில் உணவு வாங்கி கொடுக்கிறேன்.

அது மட்டும் இல்லாமல் இந்த பலூனை வாங்கிக் கொள்கிறேன் என்று தெரிவிக்கிறார். உடனே அந்த சிறுவனுடன் வேறு சில சிறுவனையும் அழைத்துக் கொண்டு போய் அந்த பெண் ஹோட்டலில் உணவு வாங்கி தருகிறார்.

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top