எதிர்பாராததை எதிர்பாருங்கள்…. ADK எங்கே?… உடல்நிலை குறித்த தகவல் உண்மை தானா!… கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!… ப்ரோமோ வீடியோ இதோ!…

By Begam

Published on:

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய நாளில் முதல் ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. 76 நாட்களை நிறைவு செய்துள்ள இந்த நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் 11 போட்டியாளர்கள் வெளியேறி இந்த நிகழ்ச்சியில் 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

   

இதை தொடர்ந்து இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார், யார் டைட்டில் வெல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்றைய நாளின் முதல் பிரமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில் ‘வீட்டார் சொல்லுங்க உங்க கணிப்பு என்ன..? யாரு வெளியேறுவார் என்று நினைக்கிறீங்க’ என கமல்  கேட்டதும், விக்ரமன் மற்றும் ஷிவின்  மைனா பெயரையும் , கதிரவன் தனலட்சுமி பெயரையும் கூறுகின்ற போது, அமுதவாணன் அசீம் பெயரை இரண்டு முறை கூற கலாய்த்து விடுகிறார் கமல்.

இந்நிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் எனக் கூறி எவிக்சன் கார்டை காட்டுகிறார் கமல். தற்பொழுது அந்த புரோமோ வீடியோவில் ADK இல்லை என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டனர்.  அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் முடியாமல் போக சிகிச்சை பெற்று வருகின்றார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வந்தது. தற்போது இந்த பிரமோ வீடியோவை பார்க்கும் பொழுது அது உண்மைதான் என்பது நமக்கு புலப்படுகிறது.

இதோ அந்த ப்ரோமோ…