நடிகர் கமலஹாசன் படத்தில் உதயநிதிக்கு பதிலாக களமிறங்க உள்ள முன்னணி  நடிகர் இவர்தானா?… படம் சூப்பர் ஹிட் தான் போங்க!… வைரலாகும் தகவல் இதோ!….

By Begam

Published on:

கமலஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ள 54 வது படத்தில் உதயநிதிக்கு பதிலாக பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இவர் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதை தொடர்ந்து கதிர்வேலன் காதல், கெத்து, நண்பேண்டா, மனிதன் போன்ற பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.

   

இவர் நடிகராக மட்டுமின்றி விண்ணைத் தாண்டி வருவாயா, குருவி , 7ஆம் அறிவு போன்ற திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். தற்பொழுது முன்னணி நடிகர்களில்  ஒருவராக வலம் வந்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இதை தொடர்ந்து அவர் சினிமாவை விட்டு விலகுவதாக வாக்களித்துள்ளார்.

அதன்படி தற்பொழுது அமைச்சராகி விட்டதால் இவர் தான் நடித்துக் கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படம் தவிர மற்ற திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் .இதை தொடர்ந்து இவர் நடிப்பில் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் 54வது திரைப்படத்தில் யார் நடிப்பது என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிகர் உதயநிதிக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க வைக்க உலக நாயகன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் கூட்டணி வெற்றிக்கூட்டணியாக அமையுமா?…பொறுத்திருந்து பார்க்கலாம்.