நடிகை ஜெனிலியா தற்பொழுது தனது மகனின் புகைப்படத்தை பதிவு செய்து அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. இதை தொடர்ந்து அவர் விஜய், பரத், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடித்த சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் தனது குறும்புத்தனம் மற்றும் கலகலப்பான குணத்தால் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டார். இந்நிலையில் நடிகர் ஜெனிலியா கடந்த 2012 பாலிவுட் நடிகர் ரிதேஷ்தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஜெனிலியா தற்பொழுது சினிமாவில் இருந்து ஒதுங்கி தனது குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஜெனிலியா. இவர் தற்பொழுது தனது மகனின் புகைப்படத்தை பதிவு செய்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை ஜெனிலியாவின் மகனா இது? இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்….



