இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

By Swetha on கார்த்திகை 19, 2026

Spread the love

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் மாணவனின் கைகளைக் கயிற்றால் கட்டி வைத்துத் தாக்கியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவனின் முகத்திலும் உடலிலும் காயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் சென்று வகுப்பறை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சிறுவன் பேச்சைக் கேட்கவில்லை என்பதற்காக ஆசிரியர் பாக்கியலட்சுமி மற்றும் உதவியாளர் செல்வி ஆகியோர் சேர்ந்து குழந்தையின் கைகளைக் கட்டித் தாக்கிய கொடூரக் காட்சிகள் பதிவாகியிருந்தன.

   

https://twitter.com/IndiaToday/status/2123340353235509373/video/1

   

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சிறார் நீதிச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஆசிரியரைத் தேடும் பணியும், பள்ளிக் கல்வித் துறையின் தனி விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.