அடுத்த குறி எ.வ. வேலுவா?….. ரூ.2,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை நீளும் ஊழல் புகார்…. காலையிலேயே பரபரப்பு….!

By Nanthini on கார்த்திகை 19, 2026

Spread the love

தனியார் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியின் அடிப்படையில், தமிழக அரசியலில் முக்கியத் திருப்பமாக முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு மீது ரூ.5,000 கோடி ஊழல் புகார் எழுந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ரூ.400 கோடி ஊழல் புகாரில் அன்பில் மகேஸ் சிறையில் உள்ள நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்பட்ட ‘பேட்ச் வொர்க்’ (சாலை சீரமைப்பு) பணிகள் மூலமாகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பான முக்கிய ஆதாரங்களை ஆதவ் அர்ஜுனா திரட்டியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அவரைக் கைது செய்ய அரசு தரப்பில் ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, அமைச்சர் எ.வ. வேலுவுக்குத் தொடர்புடைய இடங்களில் விரைவில் அதிரடிச் சோதனைகள் (ரெய்டு) நடத்தப்பட உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக அந்தத் தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்தோ அல்லது விசாரணை அமைப்புகளிடமிருந்தோ அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.