“அவர் எனக்கு தாய்க்கு மேலானவர்…” மாமியார் சிதைக்கு விறகு அடுக்கிய மருமகன்… சடங்கு முடிந்த சில நிமிடங்களில் அரங்கேறிய கோர சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

By Devi Ramu on கார்த்திகை 18, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், மாமியாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு ஆற்றங்கரையில் முகம் கழுவச் சென்ற மருமகனை ராட்சத முதலை ஒன்று கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் சென்றதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த தீபக் சர்மா என்பவர், தனது மாமியார் உயிரிழந்த செய்தி அறிந்து மனைவி ரேகாவுடன் கோண்டாவில் உள்ள தேஹா கிராமத்திற்குச் சென்றுள்ளார்.

அங்குச் சரயு நதிக்கரையில் மாமியாரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றபோது, தீபக் சிதைக்கு விறகுகளை அடுக்கி உதவி செய்துள்ளார். அப்போது அருகிலிருந்த ராஜேஷ் சுக்லா என்பவர், “நீங்கள் இந்தக் குடும்பத்தின் மருமகன், சம்பிரதாயப்படி மருமகன் சிதைக்கு விறகு அடுக்கக் கூடாது” என்று தடுத்ததற்கு, “அவர் எனக்கு மாமியார் மட்டுமல்ல, என் தாய்க்கு மேலானவர்; பழமைவாதக் கருத்துக்களைப் பேசாதீர்கள்” என்று தீபக் உணர்ச்சிப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார்.

   

பின்னர் இறுதிச் சடங்குகள் முடிந்ததும், தீபக் சரயு நதிக்கரைக்குச் சென்று முகம் கழுவுவதற்காகக் குனிந்தபோது, கரையோரத்தில் பதுங்கியிருந்த முதலை ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் அவரை கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது; அங்கிருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள்ளாகவே முதலை அவரை ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றுவிட்டது. இதனையடுத்துச் சரயு நதிக்கரையில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்குத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டும் தீபக் கிடைக்காத நிலையில், மறுநாள் மதியம் அங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அலி மஜா காட் பகுதியில் தீபக்கின் உடல் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

   

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு ஆய்வு செய்ததில், அந்த முதலை அளவில் சிறியதாக இருந்ததால் தீபக்கை முழுமையாக விழுங்க முடியவில்லை என்றும், அவரது தலை, கை மற்றும் தோள்பட்டைகளில் முதலையின் பற்கள் பதிந்த காயங்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தில் மாமியாரின் இறுதிச் சடங்கிற்கு வந்த மருமகனும் முதலைக்குப் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.