அடச்சீ… பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா?… சிக்கிய வாட்ஸ்அப் சாட்… புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் எல்லை மீறிய எஸ்.ஐ…!!

By Gayathri on கார்த்திகை 18, 2026

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ராஜகோபால் மீது, புகார் கொடுக்க வந்த பெண் ஒருவருக்குத் தகாத முறையில் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி சசிமோகன் கடந்த மே 24-ஆம் தேதி ராஜகோபாலைப் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ராஜகோபால் மீது தற்போது மேலும் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குடும்பப் பிரச்சினை மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பாகக் காவல் நிலையத்தை நாடும் பெண்களிடம் அவர் வரம்பு மீறிப் பேசியதாகவும், வாட்ஸ்அப் வழியாகப் பெண்களிடம் புடவை அணிந்த புகைப்படங்களைக் கேட்டு அநாகரிகமாக உரையாடியதாகவும் கூறப்படும் தகவல்கள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

   

பாதுகாப்பு தேடி வரும் பெண்களிடம் காவல்துறை அதிகாரியே இவ்வாறு நடந்துகொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. எனவே, ராஜகோபாலால் வேறு யாரேனும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்துத் தீர விசாரிப்பதோடு, அவரைப் பணியிடை நீக்கம் செய்வதோடு நில்லாமல் நிரந்தரப் பணிநீக்கம் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.